வியாழன், 27 ஜனவரி, 2011

விமர்சன முகம்:





காந்தியை சுட்ட பின் ....


தேடல் ஒரு சுகமான பயணம்!

அது வெற்றியடைந்தால் திருப்தி ! பின்னடைந்தால் அது ஒரு அனுபவம்!

பா. முருகானந்தம் அவர்களின் இரண்டு வருட ஆழமான தேடலின் வெற்றி தான் "காந்தியை சுட்ட பின்..." என்ற பிரமாதமான படைப்பு ! இந்த தலைமுறைக்கான தகவல் பொக்கிஷம் கூட, கதாபாத்திரங்களின் அறிமுகமே மனதை அள்ளுகிறது! புத்தக வாசி்ப்பாளர்களின் கவனத்தை திசை திருப்பவிடாமல் விறுவிறுப்பான திரைக்கதையை போல இருக்கும் அவரது உரை நடை கூடுதல் சிறப்பு!!


இது ஒரு தகவல் பொக்கிஷம்:

** இந்தியா கேட்டின் வழியாக எடுத்து செல்லப்பட்ட ஒரே இந்தியா தலைவரின் உடல் காந்தியினுடையது தான் பிற்காலத்தில் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுத்த போது இறுதிகாட்சியின் படப்பிடிப்பில் சுமார் மூன்று லட்சம் மக்கள் தாமாக முன் வந்து கலந்து கொண்டார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?



எப்படி பட்டவர் காந்தி:

அண்ணல் காந்தி ஒரு ஹிந்துத்துவ மனிதர் என்றே எண்ண தோன்றுகிறது, இவ்விஷயத்தில் அவர் இரட்டை வேடம் பூணுகிராறோ என்ற ஐயப்பாடு எழுகிறது! முஸ்லிம் பெருமக்கள் மீது எவ்வித வன்முறையும் இருக்க கூடாது மற்றும் ருபாய் 55 கோடி பாகிஸ்தான் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறித்திய காந்தி அண்ணல் தன மகன் ஹரிலால் முஸ்லிம் மதத்திற்கு மாறியது மட்டும் ஏன் அவருக்கு பிடிக்கவில்லை

இந்திய தந்தை என்று போற்றப்படும் காந்திஜியின் உடல் இந்து மத வழக்கப்படி வடக்கு நோக்கி இருக்கும் வகையில் கிடத்தபட்டது yen yendra kelvi yelukirathu?

எப்படி பட்டவன் கோட்சே:

அஹிம்சை என்ற பெயரில் இந்தியர்களை குறிப்பாக, இந்துக்களை கோழைக்களாக்கியவர் காந்தி, ஒத்துழையாமை இயக்கம், உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயர்களில் இந்த நாட்டு makkal மீது அவர் திணித்த முறைகள் மக்களின் சிந்தனைகளை மூளை மழுங்க செய்யக்கூடியவை என்ற சிந்தனை உடையவன் கோட்சே.

இந்து மத வெறி பிடித்தவன் கோட்சே. "என்னை அடிக்காதிர்கள் நான் ஒன்னும் தப்பி ஓடப்போவதில்லை என்று கூறியவன், தைரியசாலி . உயர்நீதி மன்ற மேல்முறையீடு விசாரணையின் போது நாதுராம் கோட்சே தனக்காக வாதாடினான். அவனுடைய வாதங்களை கேட்க பார்வையாளர்கள் மத்தியில் பெருங்கூட்டம். நீதி விசாரிக்கும் பெஞ்ச் நீதிபதிகளில் ஒருவரின் மகள், நாதுராமி்ர்கு ஒரு ஸ்வெட்டர் பின்னி தந்தாள்!

மேலும் பல ஸ்வாரிஸியங்கள்:


சிறப்பு நீதிமன்ற விசாரணை, கைதுப்படலம், சாட்சிபடலம், செங்கோட்டை நீதிமன்றத்தின் திர்ப்பு, நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கர்கரே, மதன்லால், கோபால் கோட்சே ஆகியோரின் நீதிமன்ற விசாரனைகள் போன்ற விஷயங்கள் மிகவும் கவனமாக எடுத்துரைத்துள்ளார் முருகானந்தம்! இது கத்தி மேல் நடக்கும் பயணம் போல, யாரும் கோவிக்காத வண்ணம் அவரது உரைநடை பயன்பட்டிருக்கிறது! கோட்சே மறைவிற்கு பிறகு அவரது வம்சாளிகளை பற்றிய தகவல்கள் அவ்வளவு அருமை!


பா. முருகானந்தம் இனி வருங்காலங்களில் மிகவும் எதிர்பார்க்ககூடிய எழுத்தாளர்!


வாழ்த்துக்கள் முருகானந்தம்!


-arivarasu

உன் 2 செ. மீ சிரிப்பில் குணமாகிறேன்
எவ்வித நல விசாரிப்பின்றி!!

வெள்ளி, 21 ஜனவரி, 2011


உன்னுடைய கண் சிமிட்டலில் ஆரம்பித்தன
எனக்கான பொழுதுகள்!